Sunday, April 14, 2013

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை



பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி பாடம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு, போட்டி தேர்வு அடிப்படையில் நிரப்புவது வழக்கம். இதில் கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளியில் பகுதி நேர கணினி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
vinoth Cm cell petition
கடந்த மாதம் சிறப்பாசிரியர்களுக்காக என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு, சிறப்பாசியர்களிடையயே கடுமையான ஆட்சேபனைகளையும், எதிர்ப்புக்களையும் உருவாக்கியுள்ளதை எனக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.
மேற்சொன...்ன பதிவில் கூறப்பட்ட விவரங்கள் என்னுடைய சொந்த கற்பனை அல்ல. முழுக்க முழுக்க உண்மைகளைக் கொண்ட பதிவு. அந்த பதிவில் கூறப்பட்டுள்ள விவரங்களை ஆதாரப்பூர்வமாக மறுக்க இயலுமெனில் அவற்றை அந்த பதிவிற்கான Comment Sectionல் பதிவிட்டிருக்கலாம். அனைவரும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். அவ்வாறின்றி தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு திட்டினால் என்ன நடந்து விடப்போகிறது.
சிறப்பாசியர்களுக்கு முழு நேர பணி வழங்கினாலோ, கால முறை ஊதியம் வழங்கினாலோ எனக்கு எந்தவிதத்திலும் பாதிப்பில்லை. சொல்லப்போனால் என் பள்ளியில் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்கள் முழு நேரம் வரும் போது என்னுடைய வேலைப் பளு குறையும், அவ்வகையில் எனக்கு நன்மையே.
அந்தப் பதிவின் நோக்கம் சிறப்பாசிரியர் பணியில் உள்ள இளைஞர்கள் தவறான கனவுகளை வளர்த்துக் கொண்டு அவர்களுடைய எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும், ஏற்கனவே இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்த அவர்கள் மீண்டும் யாரிடமும் ஏமாந்து விடக் கூடாது என்பதுவும்தான்.
யாருடைய கவனத்தையும் கவர்வதற்கான பதிவல்ல அது. பாதிக்கப்பட்டவர்கள் தன்னிலை உணர வேண்டும் என்பதற்கான பதிவது.
என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மறுமொழி பேசவிடாமல் திட்டிவிட்டு போன அன்பர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது யாதெனில்
வலுவான ஆதாரங்கள் இல்லாது நாங்கள் அடுத்த மாதமே முழு நேர பணியாளராகி காலமுறை ஊதியம் பெறுவோம் என்று என்னிடம் வேண்டுமானல் சவால் விடலாம் (அதுவும் பொது தொலைபேசியிலிருந்து) ஆனால் நடைமுறையில் அது கடுமையாக போராடி சாதிக்க வேண்டிய காரியம்.
மேலும் பார்க்க

Sunday, March 17, 2013