Saturday, March 16, 2013

16549 பகுதிநேர ஆசிரியர்கள் குறைகளை தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கருணையுடன் தனிக்கவனம் செலுத்திட வேண்டுகிறோம்


சரித்திர தமிழக முதல்வர் அம்மா அவர்களது ஆட்சியில் ஓராண்டில் நூறாண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமன ஆணையின்படி SSA வாயிலாக கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டார வள மையம் புடையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி. பள்ளிக்கென கணினி ஆய்வகமோ கணினிகளோ இல்லை. நடுநிலைப்பள்ளிக்கென வழங்கப்பட்ட கணினிகளும் தொடக்கப்பள்ளியின் வசம் இருப்பதால் கணினி அறிவியலை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் வழியில் முழுமைப்படுத்த இயலாதநிலை உள்ளது. அனைத்துப் பாடப்புரிவு பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பணியாற்றும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பாடத்திட்டங்கள் பாடப்புத்தகங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையிலும் மேலும் பாடக்குறிப்புகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வழிகாட்டுதலின்றியும் பாடவேளைகள் போதுமானதாக இல்லாத குறைபாடுகளும் தொடர்கிறது. எங்களின் கோரிக்கைகளான 1.பணியமர்த்தப்பட்ட மார்ச் 2012 முதல் ஊதிய தாமதம் 2.முழுஆண்டு விடுமுறை மே மாத ஊதியம் வழங்காதது 3.காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் தொடர்மழை நீலம் புயல் அரசு விடுமுறைகளுக்கு செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் ஊதியத்தினை பிடித்தது 4.அரசாணையில் உள்ளபடி ஒருவர் 4 பள்ளிகள்வரை பணியாற்றலாம் என்ற அரசாணைக்கிணங்க பூர்த்தி செய்யப்படவுள்ள ஏனைய காலியிடங்களில் எங்களுக்கே கூடுதலாக இன்னொரு பள்ளியில் பணி வழங்கினால் நிதிச்சுமையில் தவிக்கும் எங்களின் குடும்ப ௲ழலுக்கு பேருதவியாக இருக்கும். மேற்குறிப்பிட்டவைகளை பணிவுடன் கேட்பதையும் அனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரிகள்  மறைப்பதால் அம்மாவின் பார்வைக்கு கொண்டுவருகிறோம்.எங்களுக்கான குறைகளை களைய அம்மா அவர்கள் கருணையுடன் தனிக்கவனம் செலுத்திட வேண்டுகிறோம்

No comments:

Post a Comment